என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சர்க்கரை ஆலைகள்
நீங்கள் தேடியது "சர்க்கரை ஆலைகள்"
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்றதில் 1,179 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. இன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. #CBI #CBIregistersFIR #UPsugarmills
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னாள் முதல் மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக் காலத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் அரசுக்கு சொந்தமான 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்க அம்மாநில மந்திரிசபை கடந்த 2011-12 ஆண்டுகளுக்கு இடையில் ஒப்புதல் அளித்தது.
இப்படி அரசு சர்க்கரை ஆலைகளை 7 தனிநபர்களுக்கு விற்றதில் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். நல்லமுறையில் லாபத்தில் இயங்கிய 10 சர்க்கரை ஆலைகளை தனிப்பட்ட ஆதாயத்துக்காக மாயாவதி தனிநபர்களுக்கு தாரைவார்த்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், 21 சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்றதில் 1,179 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.
போலியான மற்றும் தவறான ஆவணங்களின் மூலம் அரசு சர்க்கரை ஆலைகளை 7 தனிநபர்கள் அபகரித்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் இவற்றில் 6 விவகாரங்களில் பூர்வாங்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வழக்கில் அம்மாநிலத்தை சேர்ந்த எந்த அரசியல்வாதியோ, அரசு உயரதிகரிகளோ இதுவரை குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #CBI #CBIregistersFIR #UPsugarmills
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #FarmersProtest #Punjab
சண்டிகர்:
நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் ரெயில்வே போலீசார் முயற்சித்து வருகின்றனர். #FarmersProtest #Punjab

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை ஆக்கிரமித்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்க்கரை ஆலைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் ரெயில்வே போலீசார் முயற்சித்து வருகின்றனர். #FarmersProtest #Punjab
×

X